மாணவர் சின்னதுரை அவரது தங்கையை சந்தித்து ஆறுதல் கூறிய கே.பாலகிருஷ்ணன்

 
tn

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை  சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  சந்தித்து ஆறுதல் கூறினார்.

Nanguneri

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை , சக வகுப்பு மாணவர்களே அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சாதிய வன்மத்தால் நடத்த இத்தகைய கொடூர சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் அவரது சகோதரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  தனது சமூகவலைத்தள பக்கத்தில், நாங்குநேரியில் சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட சக மாணவர்களால் தாக்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினோம். உடன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.கற்பகம், மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் ஆகியோர் அண்ணன் சின்னதுரை உயிரை காத்த தங்கை சந்திரா செல்விக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.