பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு - அண்ணாமலை வரவேற்பு

 
annamalai

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பெருமளவில் பாதித்த பீக் ஹவர் கட்டணத்தை திமுக அரசு குறைத்துள்ளது வரவேற்கதக்கது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பெருமளவில் பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வையும், பீக் ஹவர் கட்டணத்தையும் உயர்த்தியிருந்தது திமுக அரசு. இதனைக் கண்டித்து தமிழகத் தொழில் நிறுவனங்கள் அறிவித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி, என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது தொடர்ச்சியாக திமுக அரசை வலியுறுத்தினோம்.


தொழில் நிறுவனங்கள் மற்றும் தமிழக பாஜக கோரிக்கையை ஏற்று, பீக் ஹவர்ஸ் கட்டணத்தைக் குறைத்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை முழுவதுமாகத் திரும்பப் பெறுவதே தமிழக பாஜகவின்  கோரிக்கையாக இருந்தாலும், இந்த அரசாணையை அதன் முதல் படியாக ஏற்று வரவேற்கிறோம். தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, தமிழக பாஜக என்றும் துணை நிற்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.