#JUSTIN : முரசொலி செல்வம் காலமானார்..
எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான முரசொலிசெல்வம் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 82.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் முரசொலி செல்வம். இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சகோதரி மகனும், முரசொலி மாறனின் தம்பியும் ஆவார். மேலும், பல்வேறு தமிழ் திரைப்படங்களையும் முரசொலி செல்வம் தயாரித்திருக்கிறார். மேலும், அதிமுக ஆட்சியில் உரிமை மீறல் புகார் சுமத்தப்பட்டபோது சட்டமன்றத்தின் கூண்டில் ஏறி வாதிட்டவர் முரசொலி செல்வம்.
`
முரசொலி நாளிதழுடன் 50 ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்த முரசொலி செல்வம் பெங்களூருவில் காலமானார். முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முரசொலி செல்வம் அவர்களது உடல் பெங்களூரில் இருந்து இன்று பிற்பகல் சென்னை கொண்டுவரப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு அவரது உடல் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.