#JUSTIN: முதியவர்களுக்கு இலவசம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

 
Q

தமிழகத்தில் 70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், அதில் இடம்பெறாத முதியவர்களும் இந்த காப்பீடு திட்டத்தில் இணைக்கப்படுவர். 'இ-சேவை மையங்கள் மூலமாகவும், அரசு காப்பீடு பதிவு செய்வதுக்கான பிற மையங்கள் மூலமாகவும் பயனாளிகள் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

புதிதாக இணையும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.849 என்ற வீதத்தில் காப்பீட்டு தவணைத்தொகை, ‘யுனைடெட் இந்தியா' காப்பீடு நிறுவனத்துக்கு வழங்கப்படும். தற்போது முதல்-அமைச்சர் காப்பீட்டில் உள்ள அனைத்து மருத்துவ சேவைகளும் முதியோர் காப்பீட்டுத் திட்டத்திலும் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் முதியவர்கள் பயன் பெறு வார்கள்.