#JUSTIN | திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை கைது செய்தது காவல் துறை..!!

 
Q

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ.. பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியை புழல் சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது புழல் சிறை வாசலில் தி.மு.க.வினர் திரண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது வேலூர் காட்பாடியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணன் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர்.

அந்த வீடியோவில் பேசிய டீட்டா சரவணன், "கரூரிலேயே விஜய் கதையை முடித்திருக்க வேண்டும், அன்னைக்கே அவரைப் போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா?" என்று தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜயை நேரடியாக அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் விடுத்துப் பேசியிருந்தார்.இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கண்டனங்கள் எழுந்தன.

முதலமைச்சருக்குப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தைச் சென்னை புழல் காவல் நிலைய போலீசார் தீவிரமாகக் கையில் எடுத்தனர்.

இந்த நிலையில், விழுப்புரத்தில் மறைந்திருந்த தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் விழுப்புரத்தில் வைத்து கைது செய்தனர்.

நண்பர்களோடு பெங்களூரு செல்வதுபோல் போக்கு காட்டிவிட்டு விழுப்புரம் சென்று பதுங்கியிருந்த டீட்டா சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட டீட்டா சரவணனை சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர்.