உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியானார் சூர்ய காந்த்..!
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் இடம் பெற்றவரான சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றார்
1962, பிப். 10ல் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சூர்ய காந்த், சிறிய நகரத்தின் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த சூர்ய காந்த், அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.இவர் கிட்டத்தட்ட 15 மாதங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார். வரும் 2027, பிப். 9ம் தேதி அவர் பதவி விலகுவார்.
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பிஆர் கவாய் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பேற்றார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு , சூர்யகாந்துக்கு பதவியேற்பு செய்து வைத்தார்.
#WATCH | Delhi: Justice Surya Kant takes oath as the Chief Justice of India, at Rashtrapati Bhavan. President Droupadi Murmu administers the oath to him.
— ANI (@ANI) November 24, 2025
(Video: DD News) pic.twitter.com/ZGpcknj7G8

