நீதி வென்றது..! 33 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உ.பி.தம்பதிக்கு மரண தண்டனை..!
உ.பி., மாநிலம் நீர்வளத்துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர் ராம்பவன். இவர், வீடியோ கேம்ஸ்கள், பணம் மற்றும் பரிசு தருவதாக கூறி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு அவரது மனைவி துர்காவதியும் உடந்தையாக இருந்துள்ளார். உ.பி.,யின் பண்டா மற்றும் சித்ரகூடம் பகுதியில் 2010 முதல் 2020 வரை இந்த துயரம் அரங்கேறி உள்ளது.
குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துடன், அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்துள்ளனர்.கடந்த 2020ம் ஆண்டு இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர். விசாரணையின் போது,பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடலின் பல இடங்களில் காயம் இருந்ததும், அவர்கள் பல ஆண்டுகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதும் தெரியவந்ததுஇதனையடுத்து குழந்தைகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.
குற்றவாளிகள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல தடயங்கள் கிடைக்கப் பெற்றன. கடந்த 2021ம் ஆண்டு தம்பதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ராம்பவம் மற்றும் துர்காவதி ஆகியோர் மீதான வழக்கு அரிதிலும் அரிதானது எனக்கூறியதுடன், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும், குற்றவாளிகள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

