ஒரே ஒரு சின்ன தவறு..கோவா கடற்கரையில் உயிரிழந்த சுற்றுலா பயணி..!

 
1

கோவா பாகா கடற்கரையில் பாறை மீது அமர்ந்து வீடியோ எடுக்கும்போது அலையில் சிக்கிய சுற்றுலா பயணி.கோவாவின் பாகா கடற்கரையில் சக்திவாய்ந்த அலைகள் அடித்துச் செல்லப்பட்டதில், பிஜாபூரைச் சேர்ந்த அஷ்பக் மசாலி என அடையாளம் காணப்பட்ட 34 வயது சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

கோவாவிற்கு வெளி மாநில மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இங்குள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.மாநிலத்தின் சுற்றுலாவை மேலும் மேம்படுத்த கோவா அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கோவாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைகளில் இறங்கி குளிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர். ஆனால், கடலில் இறங்கிக் குளிக்கும் போது ஏற்படும் அமித ஆர்வத்தினால், பாதுகாப்பு எல்லையை தாண்டி ஆழமான பகுதிக்குச் சென்று விடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக எழும்பும் ராட்சத அலைகளில் சிக்கியும், கடல் சுழல்களில் அகப்பட்டும் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. 

கோவாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள உலகப் புகழ்பெற்ற கடற்கரைகளில் இறங்கிக் குளிப்பதையும், ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதையும் பெரிதும் விரும்புகின்றனர்.இதற்கு சான்றாக, சமீபத்தில் கோவாவின் புகழ்பெற்ற பாகா கடற்கரையில் (Baga Beach) உள்ள பாறை மீது அமர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், திடீரென எழும்பிய ராட்சத அலையில் சிக்கினார். அப்போது கடலில் நீரோட்டத்தின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், அவர் கண் இமைக்கும் நேரத்தில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர், மேலும் மோசமான வானிலை மீட்புப் பணிகளைக் கடினமாக்கியது. தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனர், ஆனால் உயர் அலை மற்றும் மோசமடைந்து வரும் கடல் நிலை காரணமாக அது இடைநிறுத்தப்பட்டது. பின்னர் மசாலியின் உடல் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டது.