#JUST IN : தவெக MLA-விடம் பேரம் பேசிய யூடியூபர் திருநாவுக்கரசு கைது..!
Updated: Jul 1, 2026, 11:17 IST1782884845022
த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவை வேறு கட்சியில் சேர்க்க பேரம் பேசிய புகாரில் யூடியூபர் IPDS திருநாவுக்கரசு இன்று சென்னை காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தவெக ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக பேரம் பேசியதாகவும் யூடியூபர் IPDS திருநாவுக்கரசு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி யூடியூபர் திருநாவுக்கரசை இன்று (ஜூலை 1) அதிரடியாக கைது செய்துள்ளனர்.
#JustNow || தவெக எம்எல்ஏவை வேறு கட்சியில் சேர்க்க பேரம் - IPDS திருநாவுக்கரசு கைது#TVK | #MLA | #YouTuber | #IPDSThirunavukkarasu | #Arrest | #Police | #PolimerNews pic.twitter.com/JLx6vubZlz
— Polimer News (@polimernews) July 1, 2026

