#JUST IN : விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு வந்த இளைஞருக்கு வலிப்பு..!
Updated: Dec 18, 2025, 10:20 IST1766033416030
தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் இன்று காலை 11.30 மணி முதல் 1 மணிக்குள் உரையாற்ற உள்ள நிலையில், காலை முதலே தொண்டர்கள், பொதுமக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு சரளை பகுதியில் தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்த இளைஞருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


