#JUST IN : உலகம் முழுவதும் முடங்கிய எக்ஸ் வலைதளம்..!

 
Q Q

முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் (X) தளம் இன்று திடீரென உலகம் முழுவதும் முடங்கியது. 

இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

எக்ஸ் தளத்தில் உள்நுழைய முடியாமல் சிக்கல் ஏற்பட்டதாக பயனாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். 

இந்தியாவில் இன்று (நவ.18) மாலை திடீரென முடங்கியது. மாலை 5.15 மணி முதல் இந்த சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் பயனாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழையவோ, வெளியேறவோ, பதிவுகளை பார்க்கவோ முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சேவை முடக்கம் குறித்து எக்ஸ் (X) நிறுவனம் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.