#JUST IN : ஜோஸ்யக்காரன் சொன்னால் தான் ஃபைல்ஸை திறப்பீர்களா? உதயநிதி..!!
"எங்களிடம் 3 ஃபைல்கள் உள்ளன; அதை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள் என முதல்வர் விஜய் கூறுகிறார். தயவுசெய்து அந்த ஃபைல்களை உடனே திறந்து பார்த்து நடவடிக்கை எடுங்கள்; எதற்காகப் பயந்து 3 மாதங்களாகக் காலம் தாழ்த்துகிறீர்கள்? ஃபைலைத் திறக்க ஜோசியக்காரன் சொன்னால்தான் திறப்பீர்களா? அல்லது நல்ல நேரம் ஏதும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?" என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாகக் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜோசியக்காரர் சொன்னால் தான் திறப்பாரா? இதை திறக்க என்ன பயம் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்க, இதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜூனா, மிசாவை பார்த்தவர்கள் என்று சொன்னார். ஆனால் அவர்களையே வீழ்த்தி வெற்றி பெற்றவர் எங்கள் தலைவர். அந்த பைல்களை திறந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னவர் முதல்வர் என்று பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து 'ஜோதிடர்' என்ற வார்த்தையை நீக்க நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த நிர்மல்குமார் ஜோசியம் என்று சொன்னார்கள். ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டது எங்களுக்கும் தெரியும். எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது எடுப்போம் என்று கூறியுள்ளார்.
எல்லா நிகழ்ச்சிகளையும் நேரலை செய்கிறர்கள். அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது எல்லாம் ரீல்ஸாக வெளியில் செல்கிறது. இதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்ல, இதற்கு பதில் அளித்த சபாநாயகர், நீக்கப்பட்ட வாதங்களை குறிப்பிடும் மீடியாக்கள் விபரத்தை கொடுத்தால், அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
#WATCH | ஓபன் பண்ண வெச்சிடாதீங்க.. vs நல்ல நேரம் எதும் பார்த்துட்டு இருக்கீங்களா?
— Sun News (@sunnewstamil) August 21, 2026
முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி#SunNews | #UdhayanidhiStalin | #TNAssembly | #TVKVijay pic.twitter.com/vZlTzw5O4h

