#JUST IN : தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்..!!

 
1

தூத்துக்குடியில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் 7 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நல்லப்படியாக நடந்து முடிந்து இருக்கிறது. வரும் நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நல்லப்படியாக தமிழக வெற்றிக்கழக அரசு பதவியேற்ற முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 100 சதவீதம் எல்லோரும் வரவேற்கிறார்கள்.

கடந்த 55 நாட்களாக எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா துறை ரீதியாக நாங்கள் பார்த்து கொண்டு தான் வருகிறோம். சந்தோஷமாக இருக்கிறார்கள். மக்கள் வரவேற்கும் போது நீங்களும் வரவேற்று தெரியுங்கள். சந்தோஷமாக இருப்போம்.
இவ்வாறு நிதியமைச்சர் மரிய வில்சன் கூறினார்.

மேலும் ஆறு மாதங்களில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு, அமைச்சர் மரிய வில்சன் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,

அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருவதாகவும், அவருக்கு இன்னும் கள யதார்த்தம் (ரியாலிட்டி) புரியவில்லை என்றும் அவர் சாடினார். மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு மரியாதை கொடுக்க அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் திமுகவிற்கும் தெரியவில்லை என்று அவர் விமர்சித்தார்.