#JUST IN : நேபாளத்தில் 34 தமிழர்களின் நிலை என்ன?: சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த 103 பேர் அங்கு சென்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் இன்று (ஆக.27) நடைபெற்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நிலை குறித்த விவரங்களை தமிழக அரசு மிக தீவிரமாக கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், தமிழர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், அங்குள்ள 34 தமிழர்களின் விவரங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

