#JUST IN : பிரபல நடிகருக்கு நேர்ந்த கதி...மொத்தமாக செயலிழந்து போன கை கால்கள்..!

வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்ட வெங்கல்ராவ், ஃபைட்டராக இருந்து காமெடிக்கு மாறியவர். 'பணக்காரன்', 'ராஜாதி ராஜா' கால ரஜினி, அமிதாப், தர்மேந்திரா உள்பட பலருக்கும் டூப் போட்டவர் வெங்கல் ராவ். விஜயவாடா பக்கம் புனாதிபாடு கிராமத்தில் பிறந்தவர் அவர். சினிமாவில் ஃபைட்டராகத் தன் பயணத்தை தொடங்கிய வெங்கல் ராவ் சண்டைக் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறியவர்.
hவடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வடிவேலு சினிமாவில் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் அவரது டீமில் உள்ள பல நடிகர்களும் சினிமா வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். அதில் வெங்கல் ராவும் ஒருவர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இவருக்கு சிறுநீரகம் செயலிழந்து, வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், தற்போது ஒரு கை, ஒரு கால் செயலிழந்து விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.