#JUST IN : முதல்வர் முன்னிலையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து..!
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை; சென்னை தலைமை செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் முன்னிலையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் ஜிசிசி வழித்தடத்தில் அமைந்துள்ள டிஎல்எப் டவுன்டவுன் (DLF Downtown) தரமணி வளாகத்தில் இந்த நிறுவனம் அமையவுள்ளது. இதன்மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும், தனது முதல் உலகளாவிய திறன் மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
MoU was signed in the presence of Chief Minister Joseph Vijay with US-based Walgreens to establish a Global Capability Centre in Tamil Nadu. pic.twitter.com/YdsMa4YJdO
— Vignesh Theni (@Vignesh_twitz) September 18, 2026

