#JUST IN : வானதி சீனிவாசன் படுதோல்வி..!!

 
Q

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வானதி சீனிவாசன், தொகுதி மாறி கோவை வடக்கு தொகுதியில் இந்த முறை போட்டியிட்டார். இன்று காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் வானதி சீனிவாசன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். த.வெ.க. வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை வகித்து வரும் நிலையில், தி.மு.க. வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதனால் வானதி சீனிவாசன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது பா.ஜ.க. தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக வேட்பாளர் சம்பத் குமார் 96,046 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 21,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 2-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், கொங்கு மண்டலத்திலும் தவெக தனது பலத்தை நிரூபித்துள்ளது.