#JUST IN : ஆந்திர மாநில பாஜக இணை பொறுப்பாளராக வானதி சீனிவாசன் நியமனம்..! தமிழக பாஜக பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம்..!
பாஜக தேசிய தலைமையின் புதிய அமைப்பில், தமிழக முன்னாள் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆந்திர மாநில பாஜக இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தின் கட்சி பணிகளை வழிநடத்த பாஜக மூத்த தலைவரும் தேசிய தலைவர்களில் ஒருவருமான ராம் மாதவ் தமிழக பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. தென் மாநிலங்களில் கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தவும் வளர்ச்சி பணிகளை முடுக்கிவிடவும் இப்புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா, கே அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராம் மாதவ் சாதாரணமான ஆள் கிடையாது. பாஜக எங்கெல்லாம் வளர முடியாமல் தவிக்கிறதோ அங்கெல்லாம் பொறுப்பாளராக செயல்பட்டு கட்சியை ஆட்சியில் அமர வைத்தவர். பாஜக காலூன்றவே முடியாது என்று கூறப்பட்ட ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் முதல் முறையாக பாஜகவை அரியணை ஏற்றிய பெருமை இந்த ராம் மாதவையே சேரும்.
இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவருக்கு வயது 62. பத்திரிகையாளராக இருந்தவர். எடிட்டராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் செய்தி தொடர்பாளராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதுமட்டுமின்றி பாஜகவில் தேசிய துணை தலைவராக உள்ளார்.

