#JUST IN : சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா..!!

 
Q

நாளை(ஆக.20) நடைபெறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்தநிலையில், 31-வது தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார். துணைத்தலைவராக தமிழக முதல் அமைச்சர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானத்தில் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அமித்ஷாவுக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவளத்திற்கு அமித்ஷா சென்றார். அமித்ஷா வருகை காரணமாக சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.