#JUST IN : உதயநிதி ஸ்டாலின் கைது- பரபரப்பான சூழ்நிலையில் அண்ணா அறிவாலயம் வந்தார் மு.க.ஸ்டாலின்..!!
உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் குவிந்தனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் முன்பு திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த பரபரப்பான சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
DMK President M.K. Stalin arrives at Anna Arivalayam. pic.twitter.com/6Ql4nxLcyN
— Vignesh Theni (@Vignesh_twitz) August 4, 2026

