#JUST IN : தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? ராகவா லாரன்ஸ் விளக்கம்!

 
1

 

முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பேசப்பட்ட நிலையில், “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என்று ராகவா லாரன்ஸ்  கூறியுள்ளார்.ஆசைக்காக அரசியலுக்கு வர மாட்டேன்.. மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன்  என கூறியுள்ளார்.அதற்காக அரசியலுக்கு நான் வரமாட்டேன் என நினைக்க வேண்டாம். எங்கு சென்றால் எனக்கு மரியாதை கிடைக்குமோ அங்கு செல்வேன் என்றார்.

``என்னை பல பேர் அரசியலுக்கு அழைச்சாங்க.. திருச்சி கிழக்குல போட்டியிட போறேன்னு தகவல் பரவுன உடனே ``அண்ணா நீங்க வாங்க அண்ணா.. ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம்’’ அப்படின்னு நிறைய பேர் வாழ்த்துனாங்க. நான் ஷூட்டிங் போற இடத்துல, ஆஃபீஸ்ல, ``வாங்க MLA சார்.. திருச்சி கிழக்குல போட்டியிட போறீங்களாமே’’ அப்படினுலாம் கேட்டாங்க. எல்லாரோட அன்புக்கும் ரொம்ப நன்றி. ஆனா தர்மம்னு ஒன்னு இருக்கு. கட்சிக்காக உழைச்சவங்களுக்குதான் முதல்ல வாய்ப்பு கிடைக்கணும்’’

``தர்மம்னு ஒண்ணு இருக்கு. திருச்சி கிழக்குல நான் நிக்கணுமா? இல்ல விஜய் சார் ஹீரோ ஆனதுல இருந்து போஸ்டர் ஒட்டுன ஒருத்தர் நிக்கணுமா? இல்லன்னா கட்சி ஆரம்பிச்சதுல இருந்து உழைச்சவர் நிக்கணுமா? இன்னும் எத்தனை பேரோ? அத விஜய் சார் முடிவு செய்வாரு. யாரோ ஒருத்தர் விதை போட்டு செடிக்கு தண்ணி ஊத்தி மரம் வளர்ந்து பழம் வருது.. அந்த பழத்த நான் சாப்பிடலாமா? கட்சியில உறுப்பினரா சேர்ந்து, 4 வருஷம் உழைக்கணும். அதுக்கு அப்புறம் தலைமையா பாத்து சீட் கொடுத்தா, அந்த போஸ்டிங்ல உக்காந்து மக்களுக்கு நல்லது செய்யணும். அதான் தர்மம்’’

இது அவர் பேசிய வீடியோ உங்களுக்காக 

 


 

null