#JUST IN : திருமாவளவன் சாயலில் இருந்து பிரபலமான 'திருமா ரமேஷ்' மாரடைப்பால் காலமானார் - விசிகவினர் அதிர்ச்சி..!
பண்ருட்டியில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். விசிக நிர்வாகியான இவர், அக்கட்சித் தலைவர் திருமாவளவன் சாயலில் இருப்பார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் பிரபலமான நிலையில், தனது பெயரை 'திருமா ரமேஷ்' என மாற்றி விசிகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், சற்று முன் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பண்ருட்டி ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார். தோற்றத்தில் பார்ப்பதற்கு திருமாவளவன் போலவே இருக்கும் பண்ருட்டி ரமேஷ், அவரைப் போல் பேசி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும், டிக்டாக் செயலி மூலமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனார். பண்ருட்டி ரமேஷை முதன்முறையாக பார்ப்பவர்கள் அவரை திருமாவளவன் என்றே நினைத்து விடுவார்கள்.
அப்படியே அச்சு அசலாக திருமாவளவன் போல் இருக்கும் பண்ருட்டி ரமேஷ் விசிக கொள்கைகளை சமூகவலைத்தளங்களில் பரப்பி வந்தார். இது மட்டுமின்றி பல்வேறு பாட்டுகளுக்கு வாயசைத்து இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ்களை போட்டு வந்தார். இப்படியாக தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த பண்ருட்டி ரமேஷ் மாரடைப்பு ஏற்பட்டு கடலூர் கல்யாண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்


