#JUST IN : டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட் - 25% ஊதிய உயர்வு அறிவிப்பு..!

 
Tasmac

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதியத்தை உயர்ந்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், டாஸ்மாக் துறையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலையும் பெயரில் பல மாற்றங்களை செய்து வருகிறது.  இரவு 10 மணிக்கு மேல் எந்த இடங்களிலும் கள்ள சந்தையில் மது விற்பனை இல்லை என்பதை தமிழக வெற்றி கழகம் அரசு உறுதி செய்துள்ளது.

பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் பிரச்சனை முடியாத பிரச்சனையாக உள்ளது . பல இடங்களில் வாங்குபவர்கள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரம் டாஸ்மாக் ஊழியர்கள் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்காமல் இருக்க ஊதிய உயர்வு கேட்கிறார்கள் அது நியாயமானது . ஊதிய உயர்வு கொடுத்தால் நாங்கள் 10 ரூபாய் அதிகமாக வாங்க வேண்டிய தேவை இல்லை என ஊழியர்கள் கூறுகிறார்கள்.

 மதுபான பெட்டி இறக்குபவர்களுக்கு பணம் கொடுப்பது, மின்சார கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக தொழிலாளர்கள் கூறியுள்ளனர். மதுபானங்களை கொண்டு செல்லக்கூடியவர் நிறுவனங்களிடம் அவர்களே பெட்டி இருக்கும் கூலியை ஏற்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதுவரை அதிகபட்ச ஊதியம் 500 முதல் 750 ரூபாய் வரை தான் உயர்வு வழங்கப்படும் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். துணை விற்பனையாளர்கள் உதவி விற்பனையாளர்களுக்கு 14,340 ரூபாயிலிருந்து 17,925 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. விற்பனையாளர்களுக்கு 15,000. 15,530 இல் இருந்து 19,413 வகையாக உயர்த்தப்படுகிறது. சூப்பர்வைசர்களுக்கு 17,850 இல் இருந்து 22,313 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

கிட்டதட்ட 25%  ஊதியம் உயர்த்தப்படுகிறது.  இதன் மூலம் 110.74 கோடி ரூபாய் கூடுதலாக அந்த ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. மொத்தமாக 553.72 கோடி ஊதியத்துக்காக ஒதுக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கிறோம். அரசு நிர்ணயித்த தொகைக்கு மேல் எம்ஆர்பிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்தார்.