#JUST IN : தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி..!

 
tamilisai

தவெக அரசிற்கு தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்காக கேள்வி  


வெள்ளை அறிக்கை கொடுக்கும் இவர்கள், தாங்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் சொல்ல வேண்டும்; திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சாக்குபோக்காக வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடாது 

பாஜக ஆளும் மாநிலங்களில் உபரி பட்ஜெட்டை காண்பிக்க முடியும்போது, ஏன் தமிழகத்தால் முடியவில்லை? 

பெண்களுக்கான வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசின் செயல்பாடு விவசாயிகள் மீதான அக்கறையின்மையை காட்டுவதாகவும் விமர்சித்தார்.மேலும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.


இந்த ஒரு மாத ஆட்சிக்கு சரியான மார்க் போட முடியாது; பெண்கள் பாதுகாப்பில் Total Fail Mark-தான்.  பெண்களை கசக்கிப்போடும் ஓநாய்கள் சிங்கப்பெண் அதிரடிப் படைக்கு தெரியவில்லையா?; பெண்களை மரியாதையாக நடத்தாத சமூகத்தை நிச்சயம் மதிக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.