#JUST IN : தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு..!!
மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10.10 கி.மீ நீலமுள்ள இந்தப் பாலம் தமிழ்நாட்டில் மிக நீண்ட பாலமாகும். இந்தப் பாலத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவிநாசி சாலையில் டிராஃபிக் குறைவதோடு, அருகாமை மாவட்டங்களுக்கான போக்குவரத்தும் எளிதாகிறது.
இந்த மேம்பாலம் மூலம் நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும். இந்த மேம்பாலத்தில் கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா மற்றும் அண்ணா சிலை என 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தில் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது பாலத்தில் அண்ணா சிலை ஏறுதளம் மற்றும் அதன் அளவுக்கு நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு தவிர மற்ற அனைத்து பணிகளும் முடிந்து போக்குவரத்திற்கு தயாராக உள்ளன.
இந்த மேம்பாலம் 4 வழித்தட உயர்மட்ட மேம்பாலம் ஆகவும், 6 வழித்தடத்துடன் கூடிய விரிவுப்படுத்தப்பட்ட தரைவழிச்சாலை என மொத்தம் 10 வழித் தடங்களுடன், அமைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக அடிக்கடி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பலனாக மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.


