#JUST IN : திடீர் திருப்பம்..!! விஜய் ஆட்சி அமைக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு?
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ளது விஜய்யின் தவெக.
ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. இந்த நிலையில் காங்கிரஸ் ஆதரவை விஜய் கோரியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் இன்று முடிவெடுக்க உள்ளது.
இதனிடையே திடீர் திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சரான சிவி சண்முகம் வீட்டில் 35 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், திடீர் திருப்பதாக நேற்று இரவு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.
இதனையடுத்து சி.வி.சண்முகம் தலைமையில் 35 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமானது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

