#JUST IN : நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கோவையிலும் மாணவர்கள் போராட்டம்!

 
11

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோவையிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராடிய மாணவர்களை குண்டுக்கட்டாக இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.     

நாடு முழுவதும் மருத்துவச் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில், கோவையில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய தீவிரப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.


தில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தை துவங்கிய இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்.