#JUST IN : ஆதவ் அர்ஜுனா போட்ட தவெக துண்டை போட மறுத்த செங்கோட்டையன்..!

 
1

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் கே.ஏ.செங்கோட்டையன். இதனால் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பாக கடந்த சில வாரங்களாக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தவெகவில் இணைய செங்கோட்டையன் முடிவு செய்தார். இதன் பின்னர் நேற்று தமது எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார்


இதன் பின்னர் இன்று காலை செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அக்கட்சியின் துண்டை செங்கோட்டையன் தோளில் போட்டார். உடனே அதை தோளில் இருந்து எடுத்துவிட்டு "துண்டு போட்டா கிண்டலடிப்பாங்க" என கூறினார்.