#JUST IN : ‘விவசாயம் காக்க’ ‘வெற்றி வான்மகள்’ திட்டம் உருவாக்கப்படும்..!

 
1

100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படும்.

வெற்றி வான்மகள்‘ திட்டத்தின் கீழ் 100 மகளிர் உள்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.

வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்

'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' என்ற பெயரில் இல்லத்தரசிகள் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

தென்னை சிறப்பு திட்டம்

தென்னை டானிக் பூச்சிநோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கரூர் மாவட்டத்தில் தென்னை நாற்றுப் பண்ணை தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் மற்றும் கொப்பரைக்கு விலை ஆதரவு அளிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 41 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்தார்.