#JUST IN : ஓய்வை அறிவித்தார் ரோகன் போபண்ணா..!

 
1 1

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த ரோகன் போபண்ணா 2002 ஆம் ஆண்டில் டென்னிஸ் உலகில் நுழைந்தார். கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் இந்தியாவுக்காக பல போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி உள்ளார்.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் 2018 ஆம் ஆண்டு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், 2022 ஆம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தினார்.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுடன் இணைந்து விளையாடிய போபண்ணா, 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், ரோகன் போபண்ணா தனது ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளார்.


45 வயதான ரோகன் போபண்ணா கடைசியாக பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக் உடன் இணைந்து விளையாடினார். ஆனால், இந்த இணை துரதிர்ஷ்டவசமாக தொடக்கச் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியது. இந்நிலையில் போபண்ணா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வுபெற்ற போபண்ணா, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024-க்குப் பிறகு இந்தியாவிற்கான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தற்போது அனைத்து விதமான தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.