#JUST IN : கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இணையும் புதிய பட போஸ்டரை வெளியிட்டது ரெட் ஜெயண்ட் நிறுவனம்!
45 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். ரஜினி தனது 173 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். கமல் தயாரிக்கும் இந்த படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அதனைத் தொடர்ந்து ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார்.
ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இந்த படத்தின் புரொமோவுக்கான ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இந்த நிலையில் அந்த படத்துடைய அப்டேட்டுகளை படக்குழுவினர் வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
இன்று காலை 12.07 மணிக்கு அடுத்த அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்தது போல் கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இணையும் புதிய படம் போஸ்டரை வெளியிட்டது ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனம்! அடுத்த அப்டேட் நாளை பகல் 12.07 மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவிப்பு.ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
The Magic unfolds, for the world to witness ✨ 😎#KHxRK Promo Video from tomorrow. 12:07PM. #RedGiant17 ✨ pic.twitter.com/42tZb150oA
— Red Giant Movies (@RedGiantMovies_) February 20, 2026

