#JUST IN : நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!
Dec 20, 2025, 11:35 IST1766210746947
நடிகர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக கொண்ட ஸ்ரீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்த ஸ்ரீனிவாசன் 225 படங்களில் நடித்துள்ளார். உடல் நல பிரச்னையால் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து வந்த ஸ்ரீனிவாசன் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 69.
தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 'திரைப்பட கல்லூரியில் என்னுடன் படித்தவர் ஸ்ரீநிவாசன். அவர் மிகசிறந்த மனிதர், மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவிக்கிறேன்' என கூறியுள்ளார்.


