#JUST IN : பிரபல லொள்ளுசபா காமெடி நடிகர் வெங்கட்ராஜ் காலமானார்..!

 
1 1

லொள்ளு சபா நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நடிகர் வெங்கட்ராஜ், இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக மனிதன் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பார். மேலும், மெட்ரோ, சைத்தான், எனக்கு வாய்த்த அடிமைகள், டாகால்டி, டிக்கிலோனா, உறுதி என திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் வெங்கட்ராஜ் சற்று முன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தையும், தொலைக்காட்சி ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.