#JUST IN : டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்..!
Nov 10, 2025, 23:13 IST1762796604858
செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் இன்று மாலை 7 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாவது; “டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அதிகாரிகளிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தேன்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

