#JUST IN : ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது - மரிய வில்சன்..!!
தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்தார்.
தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை; அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்அப்போது அவர் கூறியதாவது:தமிழக வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. ரூ.10 லட்சம் கோடி நேரடி கடன், ரூ.78 ஆயிரத்து 324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது. வரலாறு காணாத உச்சம் ஆகும்.அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது.பொதுத்துறை நிறுவன கடனையும் சேர்த்தால் மாநிலத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி.இவ்வாறு அவர் கூறினார்.
தனிநபர் மீது ரூ.1,28,934 கடன் உள்ளது. 2020-21ம் ஆண்டு தனி நபர் மீது ரூ.67,087ஆக இருந்த கடன் தொகை, தற்போது ரூ.1,28, 934ஆக உயர்ந்துள்ளது.

