#JUST IN : மம்தா பானர்ஜி தோல்வி..!!

 
mamta banerjee
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், 92.47% வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில் நடைபெற்ற ஃபால்டா தொகுதியில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அங்கு வரும் 21-ம் தேதி மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், இன்று 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 148 தொகுதிகளில் வெற்றிபெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும் எனும் நிலையில், பாஜக சுமார் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் இருப்பதால் அக்கட்சியின் ஆட்சி அம்மாநிலத்தில் உறுதியாகி இருக்கிறது. 80+ தொகுதிகளை கைப்பற்ற உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அமர உள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பபானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநில தலைவரான சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். TN-ல் CM ஆக இருந்த ஸ்டாலின் தோல்வியை தழுவிய நிலையில், மே.வங்க CM ஆன மம்தாவின் தோல்வியும் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.