#JUST IN : முதல்வர் விஜய் தரப்புக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
முதல்வர் விஜய் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...தேர்தல் வழக்கு: ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் விஜய் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.
இதைபோல பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல, வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்-அமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.இந்த தேர்தல் வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், முதல்-அமைச்சர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, அடுத்தமுறை விசாரணையின் போது முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் "கடந்த முறையே வழக்குகளை நீராகரிக்கோரி மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது எனவும் ஆகஸ்ட் 27-க்குள் மனு தாக்கல் செய்யுங்கள் என்றும் 6 மாதங்களில் தேர்தல் வழக்கை முடிக்க வேண்டும் என்பது விதிமுறை என நீதிபதி தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

