#JUST IN : எல்.ஐ.சி. அலுவலகத்தில் தீ விபத்து; பெண் பலி..!

 
1 1

மதுரையில் பெரியார் நகரில்  எல்.ஐ.சி. அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு 8.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கட்டிடத்தில் பரவியிருந்த தீயை அணைக்கும் பணி நடந்தது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் பலியாகி உள்ளார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.