#JUST IN : காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கிளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் மீண்டும் தேர்வு..!
2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக செல்வப் பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜேஷ் குமார் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராகப் பொறுப்பேற்றார். 2026 வரை திமுக தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக ராஜேஷ் குமார் செயல்பட்டார். தற்போது அவர் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக ராஜஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஷ் குமார் அவர்கள், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால், தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்முடிவிற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தப் புதிய பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற அவருக்குத் தேவையான வலிமையும் ஞானமும் கிட்ட வாழ்த்துகிறோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

