#JUST IN : இந்திய அணி அபார வெற்றி..!
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 3 வீரர்கள் சதம் அடித்தனர். கே.எல். ராகுல் 100 ரன்னும், துருவ் ஜூரல் 125 ரன்னும் ரவீந்திர ஜடேஜா 104 ரன்னும் எடுத்தனர்
286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 146 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக, அலிக் 38 ரன்களையும், ஜஸாடின் க்ரேவ்ஸ் 25 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.


