#JUST IN : இதை மட்டும் தவெக அரசு செய்து காட்டினால் நான் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் - தங்கம் தென்னரசு சவால்..1

 
1

தமிழகத்தின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நேற்று (ஜூன் 16) நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டிருந்தார். முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ரூ10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டதாக வெள்ளை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கு திமுகவின் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய (ஜூன் 17) செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்தார்.

தவெக ஆட்சியின் முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.திமுக ஆட்சியில் வாங்கிய கடனை விடவும், தவெக ஆட்சியில் குறைவாக கடன் பெற்று திட்டங்களை நிறைவேற்றினால், நான் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்று தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார்.

புதிய திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெறுவதைத் தவிர்க்கவே வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது தவெக அரசு.தவெக வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ6 லட்சம் கோடி தேவை.

5 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு த.வெ.க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? 15 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு 2021-ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது; முந்தைய ஆட்சிகள் பற்றி தற்போதைய வெள்ளை அறிக்கையில் இல்லாதது யாரை காப்பாற்றுவதற்காக? என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி கேட்டுள்ளார்.