#JUST IN : அரசு பணத்தை கஜானவிற்க்கு மாற்ற தெரியும்...தனிப்பட்டவருக்கு மாற்ற தெரியாது - ஊழல் பட்டியலை வெளியிட்ட முதல்வர் விஜய்..!
சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பெண் பாதிக்கப்படுவதையும் யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. சிங்கப்பெண் அதிரடிப் படை அதற்கான முதல் படி, போதைப்பொருளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் சொன்ன பிரச்சனைகள் பல வருடம் கண்டுக் கொள்ளாமல் விட்ட பிரச்சனை. இன்று எதிர்க்கட்சிகள் அதை கேட்கும் பொழுது ப்ழிப்போடும் அரசியலாக தான் தெரிகிறது. போன ஆட்சியில் நடந்தவற்றுக்கு இப்போது தான் விடை கண்டுக் கொண்டிருக்கிறோம். சட்டம் ஒழுங்கை பற்றி தாராலமாக கேள்வி கேட்கலாம். இது ஜனநாயக அரசு, மன்னர் ஆட்சி இல்லை. மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்றார்.
நாம் என்ன செய்தோம் என்று சொன்னவர்களுக்கு சில உதாரணம். மதுபான கடை மூடப்பட்டது; சிங்கப்பெண் சிறப்பு படை; மருத்துவத்துறைக்கு 40 புதிய வாகனங்கள்; ஜல் ஜீவன் திட்டம் கொண்டுவரப்பட்டது; சட்ட விரோத கல்குவாரி கனிம வளங்கள் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது; பல்வேறு குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் சாம்பிள் தான்; 40 நாளில் இவற்றையெல்லாம் செய்துள்ளோம். இன்னும் அதிகமாக நிறைவேற்றுவோம்” என்று முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கருவூலம் தேய்ந்து ஓய்ந்துள்ளது. நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டோம் இதுபோன்ற நிலைமை உருவாக்கி வைத்துவிட்டு நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என்று கூறுகிறார்கள். ஆமாம் எங்களுக்கு தெரியாது தான்; எங்க சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு மக்கள் பணியை செய்ய தெரிந்த அளவிற்கு; மக்கள் பணத்தை சுருட்ட தெரியாது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் ஊழல் - பட்டியலிட்ட முதல்வர் விஜய் :
- டெண்டர்களை முறைப்படுத்த தெரிந்த அளவிற்கு அதன் கட்டணத்தை உயர்த்த தெரியாது
- கலந்தாய்வு செய்யத் தெரியும் தவிர கலந்தாய்விற்க்கு பணம் திரட்ட தெரியாது
- புதிய பணியிடங்கள் உருவாக்க தெரியும் அந்த பணியிடங்களுக்கு பணத்தை வாங்க தெரியாது
- தங்கத்தை உருக்கி தாரை வார்க்க தெரியாது
- கோவில் பணத்தை சுருட்ட தெரியாது
- கனிமத்தை வித்து கொள்ளை அடிக்க தெரியாது
- அரசு பணத்தை கஜானவிற்க்கு மாற்ற தெரியும், தனிப்பட்டவருக்கு மாற்ற தெரியாது
- போதை கலாச்சாரத்தை அழிக்க தெரியும், அதை வளர்க்கத் தெரியாது
- பெண்களை மதிக்க தெரிந்தவர்களுக்கு ஓசி பஸ் ஆயிரம் கேஸ் எனக்கு கூறத் தெரியாது
அதனால் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுபவர்களுக்கு, ‘இதெல்லாம் எங்களுக்கு தெரியாது தான். அது தெரிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை’ என்று கடந்த கால ஆட்சி நிகழ்வுகளை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார். இதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முதல்வர் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

