#JUST IN : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை..!!
தங்கம் விலை மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு கிராம் விலை ரூ.15 ஆயிரத்திற்கு மேல் இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து ரூ.14 ஆயிரத்திற்குள் வந்தது. எனினும், அவ்வப்போது சற்று விலை அதிகரித்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும், சர்வதேச அளவில் டாலர் மதிப்பு அதிகரிப்பும், தங்கம் விலை குறைவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப, தங்கம் விலையும் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை கூட மாற்றம் கண்டு வருகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (ஏப்.1) கிராமுக்கு ரூ.380 அதிகரித்து ரூ. 14,050-க்கும், சவரனுக்கு ரூ.3,040 அதிகரித்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்.2) கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை நேற்று (ஏப்.1) ஒரு கிராமுக்கு ரூ.265-க்கும், கிலோ ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்.2) வெள்ளி ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.255-க்கும், கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,600 சரிந்து நடுத்தர மக்கள் மற்றும் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.13,750-க்கும், 1 சவரன் ரூ.1.10 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி கிலோ 2.55 லட்சத்திற்கு விற்கப்படுகிறது

