#JUST IN : கோவை அமுதன் முதல் காஞ்சிபுரம் சந்துரு வரை: தமிழ்நாட்டின் குற்ற சம்பவங்களை சட்டப்பேரவையில் பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின்!

 
1

கோவை மாணவர் கொலை, திருவொற்றியூர் கொலை, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொலை, சென்னை சொத்து வரி உயர்வு, தேனி மேகமலை விவகாரம் என 5 விவகாரங்கள் குறித்து சிறப்பு கவன ஈர்பு தீர்மானம் அளித்த திமுக.கோவை மாணவர் கொலை, திருவொற்றியூர் கொலை, கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொலை, சென்னை சொத்து வரி உயர்வு, தேனி மேகமலை விவகாரம் என 5 விவகாரங்கள் குறித்து சிறப்பு கவன ஈர்பு தீர்மானம் அளித்த திமுக

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்.. பேரவையில் பட்டியலிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்..

கவன ஈர்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே அவையில் எழுப்பும் பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இது ஒரு கோஷ்டி பூசலால் நடந்த கொலை என தெரிவித்துள்ளார்.

10 பேர் சண்டை போட்டு பத்து பேர் மோதினால் அது கோஷ்டி பூசல் என்று சொல்லலாம். ஆனால், ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து தாக்கி உள்ளனர். அதனால் இது படுகொலை. மாணவர் அமுதன் விவகாரத்தில், கோவை செட்டிபாளையம் போலீசார் வழக்கு விசாரணைக்காக அமுதனை வர சொல்லியுள்ளனர்.

போதை கும்பல் குறித்து அமுதனிடம் தகவல் வாங்கிய காவல்துறையினர், குற்றவாளிகளை கண்டுபிடித்து நியாயமாக போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருக்க வேண்டும். ஆனால், போதைப் பொருள் குறித்து அமுதனிடம் தகவல் பெற்ற காவல் துறையினர் குற்றவாளிகளிடமே அது குறித்தான தகவலை பகிர்ந்து உள்ளனர். அதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

போதைப் பொருள் கும்பல் குறித்து காவல்துறையினரிடம் அமுதன் தகவல் கொடுத்ததால் தான் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக கள ஆய்வு செய்த பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை தான் முன் வைக்கிறார்கள்

இது தனிப்பட்ட கோஷ்டி பூசலாக கடந்து போய்விட முடியாது. அரசின் அலட்சியத்தாலும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால் தான் இந்த கொலை நடந்துள்ளது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும். குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒருவருக்கும் விடப்படும் எச்சரிக்கை தான் இந்த கோவை சம்பவம். சென்னையிலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் திருவொற்றியூரைச் சேர்ந்த தனுஷ் குமார் போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக தட்டிக் கேட்டுள்ளார். அவரை 40 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொலை செய்தனர். இந்த அரசு போதைப் பொருள் தடுப்பு படையை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். அதை சொல்லி பல கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்து உள்ளீர்கள். ஆனால், களத்தில் நடப்பது வேறு மாதிரி உள்ளது.

நேற்று இரவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் படுனெல்லி கிராமத்தில் போதை கும்பலால், சந்துரு விக்கி ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 12ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்தில் தனலட்சுமி பூவரசி ஆகிய தாய் மகள் இருவரையும் இரட்டைக் கொலை செய்தனர். ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னையில் அம்பத்தூரில் வைதேகி என்ற இளம் பெண்ணை கொலை செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 13ஆம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தாமரைச்செல்வி என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் ஆகஸ்ட் 15ஆம் தேதி, கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வயதான பெண்மணி கொலை செய்யப்பட்டுள்ளார்...