#JUST IN :"6 சிலிண்டர் வாக்குறுதி.. ஆனா தருவது 3 தான்!" - அரசிற்கு எதிராக எழும் விமர்சனங்கள்!

 
1

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் முதலமைச்சரான பின், ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் எனவும், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரை :

அன்னபூரணி சூப்பா் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டா்கள் வழங்கப்படும்; வரும் பொங்கல் தினத்தில் இருந்து இத்திட்டம் தொடங்கும். 3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே பயனாளா்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். 

 

வளைக்குடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணத்தினாலும், விலைவாசி உயர்வு காரணத்தினாலும், மக்களிடையே சிரமமான சூழல் நிலவி வருகிறது. பொதுமக்கள் வருவாய் அதிகம் செலவு ஆகிறது. இதனை கருத்தில் கொண்டு, நிதி நெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. எரிவாயுவிற்க்கான மக்கள் செலவு செய்த தொகை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கான தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலண்டர் பெற்றவுடன் எண்ணெய் நிறுவனங்களிடம் பட்டியல் பெற்று பயணாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இதன் மூலம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் உள்ள குடும்பங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு குறு விவசாய குடும்பத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.