#JUST IN : பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

 
1 1

சென்னை அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் இன்று (டிச. 20) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் நிலவியது.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த அலுவலக காவலர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு உடனே தகவல் கொடுத்ததையடுத்து, சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் போராடி தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் ஏராளமான மின்சாதனப் பொருட்கள் சேதம்; அண்ணாசாலை பகுதியில் பி.எஸ்.என்.எல் இண்டர்நெட், தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.மேலும் சம்பவ இடத்திற்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அலுவலகத்தில் முழு சோதனை நடத்தப்பட்ட பின்பே சேதவிவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.