#JUST IN : ரசிகர்கள் ஷாக்..! ஐபிஎல் ஒளிபரப்பிற்கு காலவரையற்ற தடை!

 
1 1

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானைச் சுற்றியுள்ள விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அங்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதன் எதிரொலியாக, முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், அவரை உடனடியாக நீக்குமாறு பிசிசிஐ (BCCI) கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது.

இந்த விவகாரம் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடையே மோதலை உருவாக்கியுள்ளது. பிசிசிஐ-யின் இந்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.


இந்த நிலையில், ஐபிஎல் ஒளிபரப்பு மற்றும் விளம்பரத்திற்கும் வங்காளதேச அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐபிஎல் தொடர்பான அனைத்து ஒளிபரப்புகள், விளம்பரங்கள் மற்றும் நிகழ்வு ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை அப்படியே இருக்கும் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.