#JUST IN : பிரபல குணச்சித்திர நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் த.வெ.க-வில் இணைந்தார்!

 
Q

சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இன்று (ஜூன்.13) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.முன்னதாக, பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தவெக-வில் இணைந்தார்.

திரைத்துறையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன், த.வெ.க-வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இன்று அக்கட்சியில் இணைந்தார். அவருக்குத் த.வெ.க-வின் முக்கிய நிர்வாகிகள் கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கி, பொன்னாடை போர்த்தி இன்முகத்தோடு தங்களது வரவேற்பை அளித்தனர்.