#JUST IN : ஜூன் 18ம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் - தவெகவிற்கு `முதல்’ எம்.பி..?
ஜூன் 18 ஆம் தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சி.வி. சண்முகம் பதவி விலகியதால் காலியாக உள்ள இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ராஜ்யசபா எம்பியாக இருந்தார். இவர் சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அவர் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா சபாநாயகருமான ரா தாகிருஷ்ணனை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனால் ராஜ்யசபா எம்பி இடம் ஒன்று, தமிழகத்தில் காலியாகியுள்ளது. இந்நிலையில் இன்று சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூன் 8ம் தேதி
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்: ஜூன் 11ம் தேதி
தேர்தல்: ஜூன் 18ம் தேதி; அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஜூன் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 107 எம்.எல்.ஏ-க்களை பெற்றுள்ள த.வெ.கவுக்கு முதல் எம்.பி கிடைக்க வாய்ப்புள்ளது.

