#JUST IN : கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே..!
அமெரிக்காவில் தங்கி படித்து வரும் இந்தியரான அபிஜீத் திப்கே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு நையாண்டி பக்கத்தைத் தொடங்கினார்.
அந்த பக்கத்தை இளைஞர்கள் அதிகளவில் ஃபாலோ செய்தனர். ஒரு கட்டத்தில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதையடுத்து, அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
எனினும், அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' பெயரில் மீண்டும் புதிய பக்கங்கள் உருவாக்கப்பட்டன. இந்த பக்கங்களையும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று (ஜூன் 06) காலை 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் உள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அபிஜீத் திப்கே, இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தற்போது டெல்லிக்கு வந்துள்ளார்.
இந்தியா திரும்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே.. விமான நிலையத்தில் “கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்” எனப் பேட்டி அளித்தார்.
நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி CJP சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

